Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வணங்கான் படத்துக்கு புது கேமராமேனை ஒப்பந்தம் செய்த இயக்குனர் பாலா!

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (15:26 IST)
வணங்கான் படத்தை அருண் விஜய்யை வைத்து இயக்குனர் பாலா இயக்க உள்ளதாக திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

சூர்யா நடித்து, தயாரித்து இயக்குனர் பாலா இயக்கத்தில் 40 நாட்கள் வரை ஷூட்டிங் நடந்த வணங்கான் திரைப்படம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய அறிவிப்பில் இயக்குனர் பாலா தரப்பில் இருந்து ஒரு கடிதம் வெளியானது. அதில் “என் தம்பி சூர்யாவுடன் இணைந்து ’வணங்கான்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால் கதையில் நிகழ்ந்த மாற்றங்களினால் இந்த கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமோ என்ற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. 

எனவே ’வணங்கான்’ படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒரு முடிவு எடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம் தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது. ‘நந்தா’வில் நான் தான் பார்த்த சூர்யா, பிதாமகன் - இல் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம். மற்றபடி ’வணங்கான்’ பணிகள் தொடரும் ” எனக் கூறி இருந்தார்.

இந்நிலையில் பாலா நடிகர் அருண் விஜய்யை கதாநாயகனாக வைத்து வணங்கான் திரைப்படத்தை இயக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் வணங்கான் படத்தில் இருந்து ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமண்யம் விலகிவிட்ட நிலையில் இப்போது ஆர் பி குருதேவ்வை புதிய ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்துள்ளாராம் பாலா. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments