பாலா இயக்கிய வணங்கான் திரைப்படத்தில் இருந்து ஒரு கட்டத்தில் சூர்யா விலகிவிடவே, இப்போது அருண் விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் இப்போது முக்கிய வேடத்தில் நடிக்க சமுத்திரக்கனி மற்றும் மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்போது வணங்கான் படத்தை இயக்குனர் பாலா மற்றும் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர்.
வணங்கான் இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில் இப்போது படத்தின் டப்பிங் பணிகள் பூஜையோடு தொடங்கியுள்ளன. இது சம்மந்தமான புகைப்படங்களை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.