Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வார இறுதி நாட்களில் பிக்கப் ஆகும் பாலாவின் ‘வணங்கான்’… டிக்கெட் புக்கிங் அதிகரிப்பு!

vinoth
ஞாயிறு, 12 ஜனவரி 2025 (15:14 IST)
கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர் பாலாவுக்கு அவரது திரையுலக வாழ்க்கை சிறப்பாக அமையவில்லை. அவர் இயக்கிய வர்மா திரைப்படம் திருப்திகரமாக இல்லை எனக் கூறப்பட்டு வேறொரு இயக்குனரை வைத்து மீண்டும் இயக்கி வெளியிட்டார்கள். அதன் பின்னர் பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் திரைப்படத்தில் இருந்து சூர்யா விலகிக் கொள்ள அதுவும் அடுத்த அடியாக அமைந்தது.

அதன்  பின்னர் அருண் விஜய் கதாநாயகனாக நடித்தர். மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில், ரோஷினி ஹரிப்ரியன், சமுத்திரக்கனி மற்றும் மிஷ்கின் ஆகியோர் நடித்தனர். இந்த  படத்தை இயக்குனர் பாலா மற்றும் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் இணைந்து தயாரிக்க படம் கடந்த 10 ஆம் தேதி ரிலீஸானது.

இந்த படம் வெளியானதில் இருந்து பாசிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்றது. ஒரே ஒரு குறையாக மற்ற பாலா படங்களைப் போலவே இந்த படமும் இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனாலும் இந்த படத்துக்கு இப்போது ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சனி மற்றும் ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களில் படத்தைப் பார்க்க முதல்நாளை விட அதிகளவில் டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரெய்னா ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு தோனி செய்யப்போகும் ப்ரமோஷன் உதவி!

ஹாலிவுட் கார் ரேஸ் படங்களில் நடிக்க அழைப்பு வந்தால் நடிப்பேன்… அஜித் பதில்!

அதே டெய்லர்.. அதே வாடகை! டைனோசர் பழசு! ஆளுங்க மட்டும் புதுசு! - ஜுராசிக் வேர்ல்டு ரீபர்த் விமர்சனம்!

இரண்டாம் நாளில் அதிகரித்த பறந்து போ படத்தின் வசூல்!

விஜய்யின் ஸ்டைல்தான் தயாரிப்பாளர்களுக்கு ஜாக்பாட்… ஆனால் யாரும் பின்பற்றுவதில்லை- தில் ராஜு கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments