Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இட்லி கடை நடத்தி வந்த நீ.... நடிகரை மேடையில் திட்டிய பாலா!!

Advertiesment
இட்லி கடை நடத்தி வந்த நீ.... நடிகரை மேடையில் திட்டிய பாலா!!
, புதன், 12 ஏப்ரல் 2017 (13:18 IST)
சமுத்திரக்கனி இயக்கியுள்ள தொண்டன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. 


 
 
இந்த நிகழச்சியில் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான பாலா கலந்து கொண்டு பேசினார். எல்லோருக்கும் தன் வாழ்த்துக்களை தெரிவித்த பாலா, காமெடி நடிகர் கஞ்சா கருப்பை மேடையிலேயே அனைவருக்கும் முன் திட்டினார்.
 
இயக்குனர் பாலா கூறியதாவது, உனக்கு தயாரிப்பு பற்றி என்ன தெரியும்?. முட்டாள் தனமான காரியம் செய்து தற்போது சம்பாதித்த பணத்தை இழந்துவிடாய். இனி மேலாவது பிழைத்துக்கொள்.
 
சினிமாவில் நடிப்பதற்கு முன்பு இட்லி கடை நடத்தி வந்த நீ, மீண்டும் இட்லி கடை நடத்த வேண்டுமா என்ன? என்று கேட்டார். இதற்கு மேலாவது ஒழுங்காய் இரு என கஞ்சா கருப்பை திட்டி அறிவுரை கூறினார்.
 
காமெடி நடிகர் கஞ்சா கருப்பு சம்பாதித்த பணத்தை எல்லாம் பட தயாரிப்பில் நஷ்டமடைந்தார். மேலும், பாலாதான் கஞ்சா கருப்பை சினிமா துறைக்கு அறிமுகம் செய்தார். எனவே, கஞ்சா கருப்பின் நன்மைக்காக பாலா இவ்வாறு கூறியதில் தவறில்லை என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நெருப்புடா