பாலாவின் நாச்சியார் படத்தில் நடிக்க பிரபல தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் லிங்கா படத்தை தயாரித்தவர்.
ஜோதிகா, ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் நாச்சியார் படத்தை பாலா தொடங்கியுள்ளார். வரும் செப்டம்பர் மாதம் படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர். இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ், கன்னடம், இந்தி என பலமொழிகளில் படங்கள் தயாரித்துவரும் ராக்லைன் வெங்கடேஷ், திரையில் தோன்றி நடிப்பது இதுவே முதல்முறை.