Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வொர்க் அவுட் ஆனதா பகாசூரன்… முதல் 6 நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

Webdunia
வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (09:05 IST)
மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் மற்றும் நட்டி நட்ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள பகாசூரன் திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆனது. பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் பகாசூரன். மோகன் ஜியின் முந்தைய படங்களில் வெளிப்பட்ட ஜாதி சார்ந்த பார்வைக்காக பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தப் படம் குறித்தும் எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் படம் வெளியாகியுள்ள கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இந்த படம் பற்றி ட்வீட் செய்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. இதுபற்றிய அவரின் ட்வீட்டில் “பகாசூரன் திரைப்படம் நல்ல விமர்சனங்களை நான் கேட்டு வருகிறேன். வாழ்த்துகள் என்னுடைய நண்பர் நட்ராஜ் மற்றும் இயக்குனர் செல்வராகவன்” எனக் கூறியுள்ளார்.

மோகன் ஜி யின் முந்தைய இரு படங்களுக்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்திடம் இருந்து பெருவாரியான ஆதரவு கிடைத்ததாக சொல்லப்பட்டது. அதனால் அந்த இரு படங்களும் அந்த படங்களின் பட்ஜெட்டை ஒப்பிட மிகப்பெரிய அளவில் வசூல் செய்தன. ஆனால் இந்த படத்துக்கு அதுமாதிரியான ஆதரவு கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்த படம் வெளியாகி 6 நாட்களில் சுமார் 5 கோடி ரூபாய்க்குள்தான் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் பட்ஜெட்டை ஒப்பிடும் போது இந்த வசூல் குறைவானதுதான் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சின்னகுஷ்பூ ஹன்சிகாவா இது… இலியானா போல ஒல்லி லுக்கில் கலக்கல் போட்டோஷூட்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் கிளாமரஸ் போட்டோஷூட்!

குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவுதானா?... வெளியான தகவல்!

நமக்குள்ள ஏன் இவ்வளவு இடைவெளின்னு சூர்யா கேட்டார்… பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!

உடைமாற்றும்போது அத்துமீறி கேரவனுக்குள் வந்த இயக்குனர்- பிரபல நடிகை குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments