Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியை ஹீரோவாக்கிய தயாரிப்பாளர் ; கண்டு கொள்ளாத தமிழ் சினிமா

Webdunia
செவ்வாய், 30 மே 2017 (13:27 IST)
பழம்பெரும் தயாரிப்பாளர் கலைஞானம் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.


 

 
நடிகர் ரஜினிகாந்த் ‘அபூர்வ ராகங்கள்’ படம் மூலம் அறிமுகமானாலும், அவருக்கு ஹீரோ அந்தஸ்தை கொடுத்த படம் பைரவி. அப்படத்தில்தான் அவரை ஹீரோவாக நடிக்க வைத்தார் தயாரிப்பாளர் கலைஞானம். இப்படம் 1978ம் ஆண்டு வெளியானது.
 
இப்படத்தின் கதை, திரைக்கதையையும் கலைஞானமே எழுதியிருந்தார். இந்த படம் மட்டுமில்லாமல் வேறு சில படங்களுக்கும் இவர் கதை மற்றும் திரைக்கதை அமைத்துள்ளார்.மேலும், பாக்யராஜ் நடித்த ‘இது நம்ம ஆளு’ உள்ளிட்ட படங்களில் அவர் நடிக்கவும் செய்துள்ளார்.
 
வயது மூப்பின் காரணமாக கடந்த சில மாதங்களாக அவர் படுத்த படுக்கையாக இருக்கிறார். அவருக்கு உதவ யாரும்  முன்வரவில்லை எனத்தெரிகிறது. 
 
இந்நிலையில், இது கேள்விபட்ட நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால், அவரது வீட்டிற்கு சென்று அவரை நலம் விசாரித்ததோடு, அவருக்கு தேவையான உதவிகளையும் செய்துள்ளார்.
 
ரஜினிகாந்தை ஹீரோவாக்கிய தயாரிப்பாளருக்கு உதவ இதுநாள் வரை யாரும் முன் வராதது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலாஜி தரணிதரன் இயக்கும் படத்துக்காக உடல் எடையைக் குறைக்கும் விஜய் சேதுபதி!

ஸ்ரீதேவி பயோபிக் உருவாகுமா?... கணவர் போனி கபூர் பதில்!

குட் பேட் அக்லி படத்துக்கும் சிம்புவின் AAA படத்துக்கும் இப்படி ஒரு தொடர்பு இருக்கா?

தக் லைஃப் படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவு நேரமா?... வெளியான தகவல்!

நான் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறேன்… பிரபல கராத்தே மாஸ்டர் ஹுசைனி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments