விஜய்யின் பைரவா நான்கு நாளில் 100 கோடிகளை வசூலித்தது என்று அறிவித்தனர். ஆனால், பைரவா எங்களின் பாக்கெட்டை பதம்பார்த்துவிட்டது என்று விநியோகஸ்தர்கள் கதறுகின்றனர்.
பைரவா படத்தை வாங்கி வெளியிட்ட ஸ்ரீகிரீன் நிறுவனம்தான், சிபி நடித்திருக்கும் கட்டப்பாவை காணோம் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையையும் வாங்கியுள்ளது. பைரவா படத்துக்கான நஷ்டத்தை எண்ணி வைத்தால்தான் கட்டப்பாவை அனுமதிப்போம் என்று விநியோகஸ்தர்கள் தீர்மானித்துள்ளதால் கட்டப்பாவை காணோம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கட்டப்பாவை காணோம் மார்ச் 10 வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.