Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 19 April 2025
webdunia

யூ-டியூபில் இலவசமாக ‘பாகுபலி’யைப் பார்க்கலாம்...

Advertiesment
எஸ்.எஸ்.ராஜமெளலி
, வெள்ளி, 27 அக்டோபர் 2017 (12:51 IST)
யூ-டியூபில் இலவசமாக ‘பாகுபலி’ வெளியிடப்பட்டிருக்கிறது.



 


எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’, 1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. சரித்திரப் படமான இது, இரண்டு பாகங்களாக வெளியானது. பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை, ‘நெட்பிளிக்ஸ்’ நிறுவனம் 25 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியதாகத் தகவல் வெளியானது. ஆனால், தெலுங்கு மொழியிலுள்ள ‘பாகுபலி’யை யூ-டியூபில் இலவசமாகப் பார்க்க முடிகிறது.

அதேசமயம், தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தி ‘பாகுபலி’யை பணம் கட்டி மட்டுமே நெட்பிளிக்ஸில் பார்க்க முடியும். தெலுங்குத் திரையுலகத்திற்குப் பெருமை சேர்த்ததால், அந்த மொழியில் மட்டும் இலவசமாகப் பார்க்கும் வசதியை அளித்துள்ளார்களாம். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒரு கோடியே 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அந்தப் படத்தைப் பார்த்து ரசித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'மெர்சல்' நல்ல படம் என்று சொல்ல முடியாது: நீதிபதிகள் கருத்து