பாகுபலி 3 வரும்… ஆனா எந்த வடிவத்தில் தெரியுமா?

vinoth
புதன், 29 அக்டோபர் 2025 (10:52 IST)
இந்திய சினிமாவில் இப்போது அதிகமாக பேசப்படும் பேன் இந்தியா என்ற வகைமையை முதல் முதலில் உருவாக்கியதே ராஜமௌலியின் ‘பாகுபலி’ திரைப்படம்தான். அவர் இயக்கிய பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் இந்தியா முழுவதும் வெற்றி பெற்று வசூலில் சாதனைப் படைத்தன. அதன் பின்னர் கே ஜி எஃப், புஷ்பா என அந்த பார்முலாவைப் பின்பற்றி வெற்றிக் கொடி நாட்டின.

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சதய்ராஜ் மற்றும் நாசர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவான பாகுபலி முதல் பாகம் ரிலிஸாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளது. இதையடுத்து அதன் இரண்டு பாகங்களையும் ஒன்றாக்கி ஒரே பாகமாக ரி ரிலீஸ் செய்யவுள்ளனர். வரும் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி திரையரங்குகளில் ‘பாகுபலி-The epic” என்ற பெயரில் இந்த படம் ரிலீஸாகவுள்ளதாக எஸ் எஸ் ராஜமௌலி அறிவித்துள்ளார்.

இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில் ‘பாகுபலி 3’ வருமா என்று ரசிகர்கள் கேட்கத் தொடங்கியுள்ளனர். இதுபற்றி வெளியாகத் தகவலில் ‘பாகுபலி மூன்றாம் பாகத்தை அனிமேஷன் படமாக எடுக்கவுள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைத் தொடங்கியுள்ளதாகவும்’ சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த இரு படங்களின் காப்பியா ‘ட்யூட்’… இணையத்தில் வைரலாகும் ட்ரால்கள்!

அய்யய்யோ அவரா? பயங்கரமான ஆளாச்சே? பிக்பாஸ் வீட்டில் களைக்கட்டும் வைல்ட்கார்ட் போட்டியாளர்கள்!

அயலான் இயக்குனரின் இயக்கத்தில் சூரி… தயாரிக்கும் முன்னணி நிறுவனம்!

’மாரி நீதான் அந்த பைசன்..’ – படம் பார்த்துப் பாராட்டிய மணிரத்னம்!

கமல் பிறந்தநாளில் வெளியாகும் ரஜினி பட அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments