பேச்சிலர் திவ்யபாரதி தமிழில் வளர்ந்துவரும் நடிகையாக உருவாகி வரும் நிலையில் அவர் பதிவிட்டுள்ள இந்த பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது.
பேச்சிலர் படத்தின் நாயகி திவ்யபாரதி அந்த படத்தில் இருந்தே ரசிகர் கூட்டம் உருவாகி விட்டது. இப்போது அவரும் வரிசையாக படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார். இந்நிலையில் அவரின் சமூகவலைதளப் பக்கம் கவர்ச்சி புகைப்படங்களால் நிரம்பி வருகிறது. மாளவிகா மோகனன் எப்படி இதுபோல புகைப்படங்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்தாரோ அது போல திவ்யபாரதியின் புகைப்படங்களும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
இந்நிலையில் திவ்யபாரதி தன் உடல் அமைப்பை வைத்து சிலர் தன்னை “பேண்டா பாட்டில்” என பாடி ஷேமிங் செய்வதாக பதவிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் அவருடைய பதிவில் “ கல்லூரி காலத்தில் இருந்தே இயல்பாக இருக்கும் தன் உடல் இதுபோல கேலிகளுக்கு ஆளானதாகவும், ஆனால் அதே போல பலரும் தன்னை ஊக்கப்படுத்தி கருத்துகள் சொல்லி வருவதாகவும்” கூறியுள்ளார்.
அவரின் இந்த பதிவு இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.