Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகுபலியை தொலைக்காட்சி தொடராக எடுக்கும் ராஜமௌலி!

Webdunia
சனி, 1 ஏப்ரல் 2017 (14:48 IST)
மிகவும் எதிர்பார்ப்புகளிக்கிடையே உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ள பாகுபலி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 28ஆம் தேதி பாகுபலி வெளியாகிறது. இந்நிலையில் பாகுபலி தொடர்பான முதல் புத்தகம்  “தி ரைஸ் ஆஃப் சிவகாமி” (The Rise Of Sivagami) எனும் பெயரில் புகழ் பெற்ற எழுத்தாளர் ஆனந்த நீலகண்டனால்  எழுதப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

 
 
தி ரைஸ் ஆஃப் சிவகாமி என்ற மூன்று புத்தகங்கள் வெளிவர உள்ள நிலையில் இது முதல் மட்டும்தான். இந்த புத்தகத்தில்  சிவகாமி எப்படி மகிழ்மதியின் ராஜமாதாவாக மாறினார் என்பது குறித்து கூறப்பட்டுள்ளதாம்.
 
புத்தகம் வெளியீட்டு விழாவில் பாகுபலி இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,  புத்தகத்தை அடிப்படையாக கொண்டு தொலைக்காட்சி தொடர் எடுக்க உள்ளதாகவும், நார்மல் தொலைக்காட்சி நாடகங்கள்  போல் இல்லாமல் வித்தியாசமான முறையில் தயாரிக்கப்படும் என்றும் கூறினார். கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற  கேள்விக்கு, இரண்டு வருடம் காத்திருந்த உங்களுக்கு, ஒரு மாதம் காத்திருப்பீர்கள் என நம்புகிறேன் என்று கூறிவிட்டாராம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தசாவதாரம் படத்தில் தான் செய்த சாதனையை இந்தியனில் முறியடிக்கும் கமல்ஹாசன்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கணவருக்கு 250 கோடி ரூபாய் நஷ்டம்.. சொத்துகளை விற்ற சோகம்!

கங்கனா நடித்த எமர்ஜென்ஸி படத்தின் புது ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் படத்தின் சென்சார் தகவல்!

விவேக் காட்சிகளை நேற்றுதான் படமாக்கியது போல உள்ளது… இந்தியன் 2 நிகழ்வில் கமல் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments