பிரபாஸ் நடித்த பாகுபலி 2 படப் வருகிற 28ம் தேதி வெளியாகிறது. தற்போது சுஜீத் இயக்கும் ‘சாஹூ’ என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளார். பிரமோத்யின் யூவீ கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் படம்மாக்கப்பட்டு வருகிறது. பாகுபலி படத்தில் பிரபாஸ் சுமார் மூன்று ஆண்டுகளுக்கும் மேல் நடித்து வந்தார்.
பாகுபலி படத்திற்கு பிறகு ஆண்டுக்கு இரண்டு படங்களில் நடிப்பேன் என்று பிரபாஸ் அறிவித்திருந்தார். தற்போது சுஜித் இயக்கும் சாஹூ படத்தில் பிரபாஸ் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். பாகுபலி 2 வெளியாகும் ஏப்ரல் 28 தேதி சாஹூ படத்தின் டீஸர் வெளியிட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.