Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தை இயக்கப்போவது யார் தெரியுமா?

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (15:28 IST)
மலையாளத்தில் பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் என்ற இரு முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். மலையாளத்தின் பிரபலமான திரைக்கதை எழுத்தாளர் சாச்சி இயக்கிய முதல் திரைப்படமான இது அங்கே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அத்திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகி தமிழ்நாட்டிலும் கவனம் ஈர்த்தது. போலிஸ் அதிகாரி ஒருவருக்கும் ராணுவ வீரர் ஒருவருக்கும் இடையே ஏற்படும் மிகச்சிறிய மோதல் எந்த அளவுக்கு சென்று இருவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே கதை.

இந்த படம் இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளது. தமிழில் சரத்குமார் மற்றும் சசிகுமார் ஆகியவர்கள் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியுள்ள தயாரிப்பாளர் பைவ்ஸ்டார் கதிரேசனே அதை இயக்க ஆசைப்படுவதாகவும் சொல்லப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

தேர்தலில் ஜெயித்தாலும் சினிமாவை விட்டு விலக முடியாது: கங்கனா ரனாவத்

குபேரா படத்துக்காக 10 மணிநேரம் படத்துக்காக ரிஸ்க் எடுத்து நடித்த தனுஷ்!

நியு ஏஜ் அன்பே சிவம் ‘ரோமியோ’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கவின் நடிக்கும் ஸ்டார் படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்!

வார இறுதி நாட்களில் வசூல் மழை பொழியும் அரண்மனை 4… மூன்று நாள் வசூல் இவ்வளவா?

அடுத்த கட்டுரையில்
Show comments