Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாசிட்டிவ் விமர்சனங்களால் அயோத்தி படத்துக்குக் கூடும் திரையரங்கு எண்ணிக்கை!

Webdunia
சனி, 11 மார்ச் 2023 (13:33 IST)
சசிகுமார், புகழ் மற்றும் போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் மந்திரமூர்த்தி இயக்கத்தில் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘அயோத்தி’ திரைப்படம். சமீபத்தில் இந்த படம் வெளியாகி பாஸிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற ஆரம்பித்துள்ளது. அயோத்தியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு புனிதப் பயணம் வரும் ஒரு குடும்பத்தில் நடக்கும் இறப்பு மற்றும் அது சம்மந்தமான பிரச்சனைகளை மனிதம் கலந்து சொல்லி இருக்கும் இந்த படம் இப்போது பார்வையாளர்களைக் கவர தொடங்கியுள்ளது. இந்த வாரம் வெளியான படங்களில் மற்ற படங்கள் பெரிதாகக் கவராத நிலையில் சசிகுமாருக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு ஹிட் படமாக இந்த படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அயோத்தி திரைப்படம் வெளியான அன்று பெரிதாக ரசிகர்களை திரையரங்குக்குள் இழுக்கவில்லை. ஆனால் படம் பற்றி நல்ல விமர்சனங்கள் வெளிவந்ததால், அதன் பின்னர் படம் பிக் அப் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படியும் சொல்லிக்கொள்ளும் படியான வரவேற்பு கடந்த வாரத்தில் இல்லை. ஆனால் இப்போது பாசிட்டிவ் விமர்சனங்களால் அயோத்தி படத்துக்கு திரைகளின் எண்ணிக்கைக் கூட ஆரம்பித்துள்ளது. இந்த வாரம் ரிலீஸ் ஆன படங்களும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாதது அயோத்தி படத்துக்கு கூடுதல் நன்மையாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தென்காசியில் தொடங்கிய விடுதலை 2 ஷூட்டிங்!

படை தலைவன் படத்துக்குப் பிறகு பிரபல இயக்குனர் படத்தில் சண்முக பாண்டியன்!

அஜித் சிறுத்தை சிவா படத்தில் இருந்து வெளியேறுகிறதா சன் பிக்சர்ஸ்?

கைவிட்ட சூர்யா... விக்ரம் பக்கம் செல்லும் சுதா கொங்கரா!

ப்ரதீப்பின் டிராகன் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments