Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் ஜொலிக்காத அயோத்தி திரைப்படம்!

நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் ஜொலிக்காத அயோத்தி திரைப்படம்!
, வெள்ளி, 10 மார்ச் 2023 (09:45 IST)
சசிகுமார், புகழ் மற்றும் போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் மந்திரமூர்த்தி இயக்கத்தில் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘அயோத்தி’ திரைப்படம். சமீபத்தில் இந்த படம் வெளியாகி பாஸிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற ஆரம்பித்துள்ளது. அயோத்தியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு புனிதப் பயணம் வரும் ஒரு குடும்பத்தில் நடக்கும் இறப்பு மற்றும் அது சம்மந்தமான பிரச்சனைகளை மனிதம் கலந்து சொல்லி இருக்கும் இந்த படம் இப்போது பார்வையாளர்களைக் கவர தொடங்கியுள்ளது. இந்த வாரம் வெளியான படங்களில் மற்ற படங்கள் பெரிதாகக் கவராத நிலையில் சசிகுமாருக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு ஹிட் படமாக இந்த படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அயோத்தி திரைப்படம் வெளியான அன்று பெரிதாக ரசிகர்களை திரையரங்குக்குள் இழுக்கவில்லை. ஆனால் படம் பற்றி நல்ல விமர்சனங்கள் வெளிவந்ததால், அதன் பின்னர் படம் பிக் அப் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படியும் சொல்லிக்கொள்ளும் படியான வரவேற்பு ரசிகர்களிடம் இருந்து கிடைக்கவில்லை. படத்துக்கு சரியாக மார்க்கெட்டிங் செய்யாததும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் இந்த படத்தின் கதை தன்னுடையது என்று எஸ் ராமகிருஷ்ணன், நரன், மாதவராஜ், ராஜேஷ்குமார் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் சங்கர்தாஸ் ஆகியோர் உரிமைக் கோரி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈரம் அறிவழகன் இயக்கும் சப்தம் படத்தில் இணைந்த பிரபல நடிகை!