Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடியும் தருவாயில் அயலான்- ஆனா ரிலிஸ் இப்போ இல்லையாம்!

Webdunia
வியாழன், 21 ஜனவரி 2021 (17:37 IST)
சிவகார்த்திகேயன் மற்றும் ரகுல் ப்ரித் சிங் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமார் இயக்கி வரும் அயலான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.  இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வேடத்தில் நடித்து வருவதாகவும் அதில் ஒரு வேடம் வேற்றுகிரக மனிதர் என்றும் இந்த வேடம் சிவகார்த்திகேயனுக்கு உண்மையாகவே வித்தியாசமான கெட்டப் ஆக இருக்கும் என்றும் அடையாளமே தெரியாத அளவில் இந்த வேடத்திற்காக வெளிநாட்டிலிருந்து மேக்கப்மேன் வரவழைக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த படத்துக்கு பொருளாதார சிக்கல்கள் எழுந்த நிலையில் சிவகார்த்திகேயனின் ஆஸ்தான தயாரிப்பாளர் ஆர் டி ராஜாவிடம் இருந்து கே ஜே ஆர் நிறுவனம் கைப்பற்றி தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி வருகிறது. இப்போது சென்னையில் நடந்துவரும் படப்பிடிப்பு 24 ஆம் தேதியோடு முடியவுள்ளது. ஆனால் படத்தின் ரிலீஸ் இப்போது இல்லையாம். இந்த ஆண்டு இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டுதான் ரிலீஸாகுமாம். இன்னும் பத்து மாதங்களுக்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வேலைகள் நடக்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments