Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலவையான விமர்சனங்களை தாண்டியும் மைல்கல்லை எட்டிய அயலான்!

vinoth
வியாழன், 25 ஜனவரி 2024 (09:17 IST)
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் யோகி பாபு நடிப்பில் இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் ‘அயலான்’ திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்து பல்வேறு பொருளாதார பிரச்சனைகளைத் தாண்டி ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

கேப்டன் மில்லர், அயலான், மிஷன் 1 மற்றும் மெரி கிறிஸ்துமஸ் ஆகிய படங்கள் ரிலீஸான நிலையில் அயலான் படத்துக்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. படத்தில் இடம்பெற்ற வி எஃப் எக்ஸ் மற்றும் ஏலியன் சம்மந்தப்பட்ட காட்சிகள் குழந்தைகளை கவர்ந்தது. ஆனால் பெரியவர்களின் பொறுமையை இந்த படம் பல இடங்களில் சோதித்தது.

ஆனாலும் பொங்கல் ரிலீசில் இந்த படம் தான்  வின்னர் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இந்த படத்தின் அதிக பட்ஜெட் காரணமாக பெரிதாக லாபம் எடுக்க முடியவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட உள்ளதாகவும் தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஜனவரி 23 ஆம் தேதி வரைக்கும் அயலான் திரைப்படம் உலகளவில் 75 கோடி ரூபாய் அளவுக்கு திரையரங்குகள் மூலமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது? புதிய கோமாளிகள் பங்கேற்பார்களா?

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

தனுஷுக்கு வில்லனாகும் பிரபல மலையாள நடிகர்… அர்ஜுன் வேற இருக்காரா? – வெளியான தகவல்!

ஹரிஷ் கல்யாணின் அந்த படத்தைப் பார்த்த இயக்குனர் வெற்றிமாறன்..! என்ன சொன்னார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments