பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் நிறுவனம் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேல் தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட்டிலும் சுமார் 170 திரைப்படங்களை தயாரித்துள்ளது. ஏவி மெய்யப்பன் தோற்றுவித்த இந்த நிறுவனத்தை தற்போது அவருடைய வாரிசுகள் நிர்வாகம் செய்து வருகின்றனர்.
ஏவிஎம் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களை தயாரிக்கவில்லை எனினும் தற்போது ஏவிஎம் சரவணன் அவர்களின் பேத்தி கணவர் மைத்ரேயன் என்பவர் ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். தமிழில் சூப்பர்ஹிட்டான 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தின் கன்னட ரீமேக்கில், கதிர் கேரக்டரில் இவர் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
இந்த படத்தை தினேஷ் நடித்த களவாணி மாப்பிள்ளை' என்ற படத்தை இயக்கிய காந்தி மணிவாசகம் என்பவர் இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாகவும் இந்த படம் குறித்த கூடுதல் தகவல்கள் இன்னும் ஒருசில நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.