Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவதார் 2 டிரைலர் ரிலிஸ் தேதி இதுதானா? வெளியான செம்ம தகவல்!

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (15:41 IST)
இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகி வரும் அவதார் 2 படத்தின் டிரைலர் வரும் மே 6 ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ல் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரும் வசூலை அள்ளி குவித்த படம் ‘அவதார்’. உலக அளவில் அதிகமான வருமானம் ஈட்டிய படமாக கடந்த 10 வருடங்களாக முறியடிக்க இயலா சாதனையையும் இந்த படம் பெற்றிருந்தது. இந்நிலையில் 12 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.

இரண்டாம் பாகம் 2021ம் ஆண்டு டிசம்பர் 17ல் வெளியாவதாக முன்னரே அறிவித்திருந்த நிலையில் கொரோனா பாதிப்பால் தள்ளிப் போனது. இந்நிலையில் இப்போது டிசம்பர் மாதம் 2022 ஆம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு ஆண்டு இடைவெளிகளில் படத்தின் அடுத்தடுத்த பாகங்களும் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இதையடுத்து இந்த படத்தின் டிரைலர் வரும் மே மாதம் 6 ஆம் தேதி உலகம் முழுவதும் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படத்தோடு திரையரங்குகளில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சூர்யா 45’ படத்தில் இணைந்த ‘லப்பர் பந்து’ நடிகை; அதிகாரபூர்வமாக அறிவித்த ஆர்ஜே பாலாஜி..!

விடுதலையான அல்லு அர்ஜூன்! நேரில் சந்தித்த ராணா, நாக சைதன்யா! கண்ணீர் விட்ட சமந்தா!

AI டெக்னாலஜி எல்லாம் இல்ல.. ஒரிஜினல் AK தான்! - வைரலாகும் அஜித்குமார் புகைப்படம்!

ஐஸ்வர்யா லஷ்மியின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கேரளா புடவையில் அம்சமான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments