Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவதார்-2 பட டிரைலர் ரிலீஸ்.. ரசிகர்கள் கொண்டாட்டம்

Webdunia
புதன், 2 நவம்பர் 2022 (18:27 IST)
அவதார் -2 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் தற்போது ரிலீஸாகியுள்ளது.

அவதார் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது வரும் டிசம்பர் மாதம்16  ஆம் தேதி  இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

டைட்டானிக் நடிகை கேட் வின்ஸ்லெட்டின் லுக் உள்ளிட்டோர் நடிப்பில், தோராயமாக  250 மில்லியன் டாலர் செலவில் உருவாகியுள்ள இப்படம், 160 மொழிகளில் டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவதார் படத்தின் இரண்டாம் பாகத்தின் தலைப்பு பற்றிய தகவல் இப்போது வெளியாகியுள்ளது ‘Avatar 2: the way of water’ என தலைப்பு வைத்துள்ளனர்.

உலக சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அவதார் -2 பட டிரைலர் அவதார் என்ற அதிகாரப்பூர்வ யூடியூப் தளத்தில் ரிலீஸாகியுள்ளது.

தண்ணீருக்குள் நடக்கும் சம்பவத்தைப் பற்றிய கதை எனத் தெரிகிறது. மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும்படி, வியப்பூட்டும் படி உள்ளன.

இந்த வீடியோவை இதுவரை 3  லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ள   நிலையில், 30 ஆயிரம் லைக்குகளும், ஆயிரம் கமெண்ட்களும் குவிந்துள்ளன.

இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படப்பிடிப்பில் ஸ்டண்ட் கலைஞர் உயிரிழந்த வழக்கு… நீதிமன்றத்தில் ஆஜரான பா ரஞ்சித்!

பிரபாஸின் ராஜாசாப் படத்தில் முதியவராக சஞ்சய் தத்… படக்குழு வெளியிட்ட போஸ்டர்!

நண்பன் ரத்னகுமாருக்காக தயாரிப்பாளர் ஆகும் லோகேஷ் கனகராஜ்!

கூலி படத்தில் பிஸி… கிங்டம் படத்தின் பின்னணி இசையை ‘அவுட்சோர்ஸ்’ செய்யும் அனிருத்!

பீரியட் படமாக உருவாகிறதா தனுஷ் & விக்னேஷ் ராஜா இணையும் படம்?

அடுத்த கட்டுரையில்
Show comments