நிற்காமல் தொடரும் அவதார் 2 படத்தின் வசூல்!

Webdunia
திங்கள், 26 டிசம்பர் 2022 (15:52 IST)
அவதார் 2 உலகளவில் 7000 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகி வெளியாகியுள்ள படம் ‘அவதார்: தி வே ஆப் வாட்டர்’. கடந்த 2009ல் வெளியாகி பெரும் ஹிட் அடித்த அவதார் படத்தின் இரண்டாம் பாகமான இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்தியாவில் விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு இடையிலான ஷேர் பிரிப்பதில் ஏற்பட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடியாததால் சில திரையரங்குகளில் அவதார் 2 ரிலீஸ் ஆகவில்லை.

இந்நிலையில் இப்போது ஒரு வாரத்தைக் கடந்துள்ள நிலையில் அதிகளவில் ரசிகர்களை திரையரங்குக்கு வரவழைக்க, டிஸ்னி நிறுவனம் டிக்கெட் விலைகளை குறைக்க முடிவு செய்துள்ளது. ஐமேக்ஸ் உள்ளிட்ட சிறப்புத் திரைகளை தவிர, மற்ற அனைத்து திரையரங்குகளிலும் 150 ரூபாய் டிக்கெட் மற்றும் 3டி கிளாஸுக்கான கட்டணம் மட்டும் வசூலிக்க சொல்லி, உத்தரவிட்டுள்ளதாம். 

இந்நிலையில் இப்போது வரை இந்தியாவில் 300 கோடி ரூபாய் வசூலும், உலகளவில் 7000 கோடி ரூபாயும் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்புவின் 'அரசன்' படத்தில் விஜய் சேதுபதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அப்படியே ‘செல்லமே’ விஷால் ரேஞ்சுக்கு வந்துட்டாரே? இதுதான்டா கம்பேக்

ரஜினி கமல் இல்லைனா வேற படமே இல்லையா? சுந்தர் சி விலகியது குறித்து ரமேஷ் கண்ணா விளக்கம்

ஹிப்ஹாப் ஆதி கான்செர்ட் மூலம் 160 கோடி ரூபாய் வருவாயா?... ஆச்சர்யத் தகவல்!

ரஜினி படத்தில் இருந்து சுந்தர் சி வெளியேற இதுதான் காரணமா?.. மூத்த இயக்குனர இப்படி நடத்தலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments