பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 'காக்கா முட்டை' படத்தில் தைரியமாக இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்து பெரும் பாராட்டுக்களை பெற்றவர். அந்த வகையில் அவர் தற்போது அருண்காமராஜ இயக்கி வரும் 'கனா' என்ற படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்து வருகிறார்
இந்த படத்தில் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகள் தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக இயக்குனர் அருண்காமராஜ், பிரபல முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீர்ர் டாவ் வாட்மோர் என்பவரை வரவழைத்துள்ளர். வாட்மோர் கடந்த சில நாட்களாக ஐஸ்வர்யாவுக்கு கிரிக்கெட் பயிற்சி கொடுத்து வருவதாகவும், இதனால் இந்த படத்தில் ஐஸ்வர்யா அசல் கிரிக்கெட் வீராங்கனை போலவே நடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷூக்கு தந்தையாக சத்யராஜ் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் ரமா, முனீஷ்காந்த் உள்பட பலர் நடித்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் மோஷன் போஸ்டர் இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.