Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆக. 25 வெளியாகும் குற்றமே தண்டனை

ஆக. 25 வெளியாகும் குற்றமே தண்டனை

ஆக. 25 வெளியாகும் குற்றமே தண்டனை
, புதன், 3 ஆகஸ்ட் 2016 (14:50 IST)
காக்கா முட்டைக்குப் பிறகு மணிகண்டன் இயக்கிய படம், குற்றமே தண்டனை. விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள இந்தப் படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. தற்போது திரையரங்கில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.


 
 
ஒரு கொலை அதனை சுற்றியுள்ளவர்களை எப்படி பாதிக்கிறது என்பதை மையப்படுத்தி குற்றமே தண்டனை தயாராகியுள்ளது. இளையராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்துக்கு குற்றமும் தண்டனையும் என்றுதான் மணிகண்டன் பெயர் வைத்திருந்தார். படத்தைப் பார்த்த இளையராஜா குற்றமே தண்டனைதான் இந்தப் படத்துக்கு பொருத்தமான பெயர் என்று கூற, அப்படியே படத்தின் பெயரை மாற்றினார் மணிகண்டன்.
 
வரும் 25 -ஆம் தேதி இந்தப் படத்தை வெளியிடுகின்றனர். இதையடுத்து மணிகண்டன் இயக்கிய ஆண்டவன் கட்டளை படம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் தமிழுக்கு வரும் ஸ்வேதா மேனன்