Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் தமிழுக்கு வரும் ஸ்வேதா மேனன்

மீண்டும் தமிழுக்கு வரும் ஸ்வேதா மேனன்

மீண்டும் தமிழுக்கு வரும் ஸ்வேதா மேனன்
, புதன், 3 ஆகஸ்ட் 2016 (13:29 IST)
ஸ்வேதா மேனன் மலையாளத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவர். எந்த சிரமமான வேடத்தையும் அனாயாசமாக செய்யக் கூடியவர். ஆனால், தமிழ் சினிமா அவரை கவர்ச்சி நடிகையாக மட்டுமே அறிந்து வைத்திருக்கிறது. 


 
 
கடைசியாக தமிழில் அரவான் படத்தில் ஸ்வேதா மேனன் நடித்தார். அதிலும் தாசி வேடம்தான். இந்நிலையில், இதுவரை அவர் நடித்த தமிழ்ப் படங்களுக்கு முற்றிலும் விதியாசமான கதைக்களத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். அவரது கதாபாத்திரமும் வித்தியாசமானதே.
 
அறிமுக இயக்குனர் சுரேஷ் இணையதள குற்றங்களை மையப்படுத்தி எடுக்கும், இணையதளம் என்ற திரைப்படத்தில், சைபர் க்ரைம் அதிகாரியாக ஸ்வேதா மேனன் நடிக்கிறார். உடன் நடிப்பவர் கணேஷ் வெங்கட்ராமன். 
 
இந்தப் படமாவது ஸ்வேதா மேனன் மீதான இமேஜை மாற்றுமா பார்ப்போம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தர்மதுரை ட்ரைலர் (வீடியோ)