இயக்குனர் அட்லி கேட்கும் பட்ஜெட் குறித்து ஷாருக் கானின் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைச்சல் கொடுக்கிறார்களாம்.
இயக்குனர் அட்லி ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்களை இயக்கி அதன் மூலம் கோலிவுட்டின் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இதையடுத்து அவர் ஷாருக் கான் படத்தை இயக்கும் வாய்ப்புக்காக சமீபகாலமாக பாலிவுட்டில் முகாமிட்டுள்ளார். இந்நிலையில் அவர் இயக்கும் படத்துக்கான வேலைகள் மும்முரமாக இப்போது நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் படத்துக்கு தேவையான பட்ஜெட் மற்றும் செட் அமைக்கும் பணிகள் குறித்து ஏதேனும் கேட்டால் அதற்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் வந்து அதற்கான விளக்கம் கேட்டு கேள்விகளால் துளைத்தெடுக்கிறார்களாம். இதனால் கோலிவுட் போல சுதந்திரமாக செயல்பட முடியாதோ எனக் குழப்பத்தில் உள்ளாராம்.