Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிகில் ட்ரைலருடன் புகைப்படம் வெளியிட்ட அட்லீ..!

பிகில் ட்ரைலருடன் புகைப்படம் வெளியிட்ட அட்லீ..!
, சனி, 12 அக்டோபர் 2019 (17:03 IST)
தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் பிகில். இப்படத்தில், விஜய் அப்பா – மகன் என்று இரு வேடங்களில் நடித்துள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். உடன்  யோகி பாபு, கதிர், விவேக், இந்துஜா, ஜாக்கி ஷரூப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா, தேவதர்ஷினி, ரெபா மோகா ஜான், வர்ஷா போலம்மா, ஐஎம் விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர். 


 
வருகிற தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரைலர் இன்று  மாலை 6 மணியளவில் வெளியாகவுள்ளது. படத்தின் ட்ரைலரில் விஜய்யின் தோற்றத்தை காண வெறித்தனமான வெய்ட்டிங்கில் காத்திருக்கின்றனர் . இதற்கிடையில் தற்போது படக்குழுவினர்கள் இப்படத்தின் ட்ரைலரை பார்த்துவிட்டு, ட்ரைலருடன் போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.
 
இதனை கண்ட ரசிகர்கள் தளபதியின்  பிகில் சத்தம் காதைக்கிழிக்கணும் என உலக அளவில் ட்ரெண்ட் செய்ய காத்திருக்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஷால் திருமணம் நின்று போனதா..? அவர் அப்பாவே சொல்லிட்டார்!