Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செப்டம்பர் மாதம் தொடங்கும் அட்லி படம்… படப்பிடிப்பில் நடந்த மாற்றம்!

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (16:00 IST)
இயக்குனர் அட்லி இயக்கும் படத்தில் ஷாருக் கான் நடிக்க உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

ஷாருக்கான் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் அட்லி இயக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் ஷாருக்கான் ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் மேலும் ஒரு நாயகி இணைந்து இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் அதில் ஒரு வேடத்தில் நடிக்கும் ஷாருக்கானுக்கு நயன்தாரா ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு துபாயில் தொடங்குவதாக இருந்தது. ஆனால் இப்போது மும்பையில் முதல் கட்டப் படப்பிடிப்பை மாற்றியுள்ளனர் படக்குழுவினர். இந்த படப்பிடிப்பை முடித்து விட்டு ஷாருக் கான் நடிக்கும் வேறு படங்களின் படப்பிடிப்பும் முடிந்த பின்னரே துபாய்க்கு செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments