Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“பாதி படமே சென்னையில்தான் போல….” அட்லி ஷாருக் கான் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (10:53 IST)
இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் ஜவான் திரைப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்து வருகிறது.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் புனேவில் தொடங்கி நடந்தது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்துக்காக மும்பையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறார் அட்லி. இதையடுத்து சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு மற்றும் தலைப்பு ‘ஜவான்’ என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. சென்னையில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு காட்சிகளை அட்லி படமாக்கி வருகிறார். சென்னையில் ஷூட்டிங் நடக்கும்போது அதில் ஒருநாள் விஜய் கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் இங்கு அமைக்கப்பட்டுள்ள அரங்கில்தான் படமாக்கப்பட உள்ளதாம். அதனால் கிட்டத்தட்ட ஒரு மாதம் சென்னையில்தான் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments