Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் இணையும் பிகில் கூட்டணி…. கலக்கத்தில் தயாரிப்பாளர்!

மீண்டும் இணையும் பிகில் கூட்டணி…. கலக்கத்தில் தயாரிப்பாளர்!
, வெள்ளி, 21 ஜனவரி 2022 (15:56 IST)
விஜய் இயக்கத்தில் அட்லி இயக்க ஒரு படம் விரைவில் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

விஜய்யின் சினிமா மார்க்கெட்டை கடந்த சில ஆண்டுகளில் பெரிய அளவில் விரிவாக்கியதில் அட்லியின் படங்களுக்கு முக்கியமான இடம் உண்டு. தெறி, பிகில் மற்றும் மெர்சல் ஆகிய இவர்களின் படங்களுக்கு பிறகு இவர்கள் மீண்டும் இணையவேண்டும் என்பது ரசிகர்களின் ஆவலாக உள்ளது.

இந்த ஆசை விஜய்க்கும் இருக்கவே செய்கிறது. இப்போது ஷாருக் கான் படத்தை இயக்கி வரும் அட்லியை விரைவில் ஒரு படத்தை இயக்க அழைத்துள்ளாராம். மேலும் இந்த படத்தை ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் உருவான பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தையே தயாரிக்கும்படி விஜய் கேட்டுக்கொண்டுள்ளாராம். ஆனால் பிகில் படத்திலேயே செலவை எக்கச்சக்கமாக இழுத்துவிட்ட அட்லியை நினைத்து ஏஜிஎஸ் நிறுவனம் கலக்கத்தில் உள்ளதாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்!