Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட்லி அல்லு அர்ஜுன் படத்தில் நடிக்க ஹாலிவுட் நடிகரோடு பேச்சுவார்த்தை!

vinoth
வெள்ளி, 7 மார்ச் 2025 (09:27 IST)
தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என அடுத்தடுத்து சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் அட்லி பாலிவுட் சென்று ஜவான் என்ற பிளாக்பஸ்டர் படத்தை ஷாருக் கானுக்குக் கொடுத்தார். இதன் மூலம் இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனர் ஆகியுள்ளார். அடுத்து அல்லு அர்ஜுன் நடிப்பில் ஒரு படத்தை இயக்கப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அந்த படம் பேச்சுவார்த்தையோடு கைவிடப்பட்டது.

இதையடுத்து அவர் சல்மான் கானை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாகவும் அதற்கான திரைக்கதை வேலைகள் நடந்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும் இந்த படத்தில் சல்மான் கானோடு கமல்ஹாசன் அல்லது ரஜினிகாந்தை நடிக்க வைக்க அட்லி முயற்சி செய்வதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர்கள் தரப்பில் இருந்து சாதகமான பதில் எதுவும் வரவில்லை என்று சொல்லப்படுகிறது.  இதனால் அந்த படம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அவர் அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தை நடிக்கவைக்கவும் முயற்சிகள் நடக்கின்றனவாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சம்பளமே வாங்காமல் சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? என்ன காரணம்?

’டூரிஸ்ட் பேமிலி’ இயக்குனரை வளைக்க முயற்சிக்கும் சிம்பு, தனுஷ், எஸ்கே.. பட்டியலில் இணைந்த தெலுங்கு நடிகர்..!

அஜித்தின் அடுத்த பட சம்பளம் இத்தனை கோடியா? விஜய்யை நெருங்கிவிட்டாரா?

சிம்பு - சந்தானம் மோதலால் படமே டிராப்பா? பார்க்கிங் இயக்குனரின் பரிதாப நிலை..!

பூனம் பாஜ்வாவின் அழகிய கேண்டிட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments