அல்லு அர்ஜுனின் அடுத்த படத்தில் இணையும் சிவகார்த்திகேயன்..!

vinoth
ஞாயிறு, 9 மார்ச் 2025 (08:37 IST)
தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என அடுத்தடுத்து சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் அட்லி பாலிவுட் சென்று ஜவான் என்ற பிளாக்பஸ்டர் படத்தை ஷாருக் கானுக்குக் கொடுத்தார். இதன் மூலம் இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனர் ஆகியுள்ளார். அடுத்து அல்லு அர்ஜுன் நடிப்பில் ஒரு படத்தை இயக்கப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அந்த படம் பேச்சுவார்த்தையோடு கைவிடப்பட்டது.

இதையடுத்து அவர் சல்மான் கானை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாகவும் அதற்கான திரைக்கதை வேலைகள் நடந்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும் இந்த படத்தில் சல்மான் கானோடு கமல்ஹாசன் அல்லது ரஜினிகாந்தை நடிக்க வைக்க அட்லி முயற்சி செய்வதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர்கள் தரப்பில் இருந்து சாதகமான பதில் எதுவும் வரவில்லை என்று சொல்லப்படுகிறது.  இதனால் அந்த படம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் அட்லி, அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் அட்லி, சிவகார்த்திகேயனை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அபிஷேக் பச்சனுடனான பிரிவு! வேறொரு திருமணம்.. கரீஷ்மா கபூர் முதலிரவில் நடந்த மோசமான சம்பவம்

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்.. விஜய், ரஜினிக்கு செஞ்சது போதாதா?

‘அஞ்சான்’ படத்தை கிண்டலடித்த ஆர்ஜே பாலாஜி.. இப்ப வம்புக்கிழுத்த லிங்குசாமி

பிக் பாஸ் 9: ஆதிரை மீண்டும் வருகை; இந்த வாரம் எவிக்சன் இல்லையா?

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments