Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தெலுங்கு ரசிகர்களையும் கவர்வாரா விஜய்?

தெலுங்கு ரசிகர்களையும் கவர்வாரா விஜய்?
, புதன், 8 நவம்பர் 2017 (19:45 IST)
விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ படத்தின் தெலுங்குப் பதிப்பு, நாளை ரிலீஸாக இருக்கிறது.


 
 
விஜய் மூன்று வேடங்களில் நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘மெர்சல்’. அட்லீ இயக்கிய இந்தப் படத்தை, தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. தீபாவளிக்கு உலகம் முழுவதும் வெளியான ‘மெர்சல்’, சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் தெலுங்கில் மட்டும் வெளியாகவில்லை.
 
இந்நிலையில், ‘மெர்சல்’ படத்தின் தெலுங்குப் பதிப்பான ‘அதிரிந்தி’, நாளை ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரிலீஸாக இருக்கிறது. கிட்டத்தட்ட 400 தியேட்டர்களில் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது என்கிறார்கள். உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களைக் கவர்ந்த விஜய், தெலுங்கு ரசிகர்களைக் கவர்வாரா எனப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சமந்தா-நாகசைதன்யா திருமண வரவேற்பு தேதி அறிவிப்பு