நெல்சன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் ‘DNA’ படத்தின் முதல் லுக் ரிலீஸ்!

vinoth
புதன், 8 மே 2024 (07:58 IST)
ஒருநாள் கூத்து திரைப்படம் மூலமாக கவனம் ஈர்த்தவர் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன். இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்த படம் வெற்றியைப் பெற்றது.

அதையடுத்து அவர் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ஃபர்ஹானா திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டுகளைக் குவித்தது. ஆனால் வசூல் ரீதியாக ஜொலிக்கவில்லை.

இதையடுத்து அவர் தற்போது அதர்வாவை வைத்து DNA என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை டாடா, ஜிப்ஸி உள்ளிட்ட படங்களைத் தயாரித்த ஒலிம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக அம்பேத் குமார் தயாரித்து வருகிறார். நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். நேற்று அதர்வா பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸாகி கவனம் பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments