Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தகர்ந்தது தடை: அதர்வாவின் '100' படத்தின் புதிய ரிலீஸ் தேதி!

Webdunia
வியாழன், 9 மே 2019 (21:09 IST)
அதர்வா நடித்த '100' திரைப்படம் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு நேற்று சென்னையில் பத்திரிகையாளர்கள் காட்சியும் திரையிடப்பட்டது. 
 
ஆனால் பொருளாதார பிரச்சனை காரணமாக இந்த படம் இன்று திட்டமிட்டபடி வெளியாகவில்லை. இதனையடுத்து இந்த படம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருந்த நிலையில் தயாரிப்பாளர் தரப்பினர் வழக்கு தொடுத்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து இன்று படத்தின் அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து இந்த படம் நாளை தமிழகம் முழுவதும் வெளியாகவுள்ளது. ஏற்கனவே பத்திரிகையாளர் காட்சியில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துள்ளதால் இந்த படம் வெற்றி பெறும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
 
அதர்வா, ஹன்சிகா, யோகிபபு, ராகுல்தேவ், ராதாரவி, மதுமிதா, விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சாம் ஆண்டன் இயக்கியுள்ளார். சாம் சிஎஸ் இசையில் ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவில் பிரவீண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் 141 நிமிடங்கள் ரன்னிங் டைமை கொண்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments