சிவகார்த்திகேயனின் 'Mr.லோக்கல்' படத்திற்கு சென்சார் கொடுத்த சர்டிபிகேட்

Webdunia
வியாழன், 9 மே 2019 (20:57 IST)
சிவகார்த்திகேயன் நடித்த அனைத்து படங்களும் இதுவரை சென்சாரில் 'யூ' சான்றிதழ் பெற்றுள்ள நிலையில் அவருடைய அடுத்த படமான ''Mr.லோக்கல்'' திரைப்படமும் சென்சாரில் இன்று 'யூ' சான்றிதழ் பெற்றுள்ளது
 
'Mr.லோக்கல்' திரைப்படம் வரும் 17ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருப்பதாக இன்று காலை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மாலை சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து 'யூ' சான்றிதழையும் வழங்கிவிட்டனர். எனவே இந்த படம் மே 17ஆம் தேதி வெளியாகவிருப்பது 100% உறுதியாகிவிட்டது
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட இந்த படத்தின் பேட்ச்வொர்க் படப்பிடிப்பு நடந்த நிலையில் ஒருகட்டத்தில் இந்த படம் திட்டமிட்டபடி வெளிவருமா? என்ற சந்தேகம் கூட பலருக்கு ஏற்பட்டது. ஆனால் படக்குழுவினர்கள் இரவுபகலாக பணிபுரிந்து இந்த படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டனர்.
 
இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா, யோகிபாபு, சதீஷ், ஆர்ஜே பாலாஜி, பிரகாஷ்ராஜ், ரோபோ சங்கர், ஆனந்த்பாபு, சுமன் உள்பட பலர் நடித்துள்ளனர். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் க்யீன் யாஷிகா ஆனந்தின் கலக்கல் புகைப்படத் தொகுப்பு!

பிக் பாஸ் 9: வைல்ட் கார்டு மூலம் கணவன் - மனைவி ஜோடி என்ட்ரி! இனிமேல் சூடு பிடிக்குமா?

மீண்டும் போலீஸ் உடையில் சூர்யா… எந்த படத்தில் தெரியுமா?

பெயரை சுருக்க சொன்னது அவர்தான்… ஆனா காரணம் சொல்லமுடியாது – ஆர் ஜே பாலாஜி பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments