Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷின் ‘குபேரா’ படத்துடன் மோதும் அதர்வாவின் ‘DNA’!

vinoth
வியாழன், 5 ஜூன் 2025 (12:07 IST)
ஒருநாள் கூத்து திரைப்படம் மூலமாக கவனம் ஈர்த்தவர் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன். இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்த படம் வெற்றியைப் பெற்றது.

அதையடுத்து அவர் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ஃபர்ஹானா திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டுகளைக் குவித்தது. ஆனால் வசூல் ரீதியாக ஜொலிக்கவில்லை. இதையடுத்து அவர் தற்போது அதர்வாவை வைத்து DNA என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த படத்தை டாடா, ஜிப்ஸி உள்ளிட்ட படங்களைத் தயாரித்த ஒலிம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக அம்பேத் குமார் தயாரித்து வருகிறார். நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்துக்கு ஐந்து இசையமைப்பாளர்கள் பணியாற்ற உள்ளனர். காந்த் ஹரிஹரன், சத்ய பிரகாஷ், அனல் ஆகாஷ், பிரவீண் சைவி, சஹி சிவா ஆகிய ஐந்து புதுமுக இசையமைப்பாளர்கள் பணியாற்றுகின்றனர். படம் முடிந்து ரிலீஸாகாமல் இருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது.

ஜூன் 20 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகவுள்ளது. அதே தேதியில் தனுஷ் நடித்துள்ள ‘குபேரா’ திரைப்படமும் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் தள்ளிப் போகிறதா பவன் கல்யாணின் ‘ஹரிஹர வீரமல்லு’ திரைப்படம்?

சின்மயி வெர்ஷனா?.. தீ வெர்ஷனா?... அடிச்சிகிட்ட ரசிகர்கள் – மணி சார் வைத்த ட்விஸ்ட்!

மன்னிப்புக் கேட்க முடியாது… கமலுக்கு ஆதரவாக டீஷர்ட் அணிந்து தக்லைஃப் பார்க்க வந்த ரசிகர்

சுப்ரமணியபுரம் படத்தில் நடித்த நடிகர் முருகன் காலமானார்… ரசிகர்கள் அஞ்சலி!

தன்னுடைய ரோல் மாடல் பெயரிலானக் காரை வாங்கிய அஜித்!

அடுத்த கட்டுரையில்
Show comments