Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நேரத்தில் ரஜினி, விஜய் படங்களைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ்

Webdunia
சனி, 24 பிப்ரவரி 2018 (17:36 IST)
சன் பிக்சர்ஸ் நிறுவனம், ஒரே நேரத்தில் ரஜினி மற்றும் விஜய் படங்களைத் தயாரிக்கிறது. 
விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், தற்போது ‘தளபதி 62’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. இரண்டாவது முறையாக கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு ஜோடியாக நடிக்க, ‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு  இசையமைக்கிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
 
‘2.0’ மற்றும் ‘காலா’ படங்களைத் தொடர்ந்து ரஜினி ஒரு படத்தில் நடிக்கிறார். அந்தப் படத்தை, ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’ மற்றும் ‘இறைவி’ படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் இயக்க இருக்கிறார். இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது.
 
கலைப்புலி எஸ்.தாணுவுக்குத்தான் ஏற்கெனவே இப்படியொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ரஜினி நடித்த ‘கபாலி’யைத் தயாரித்த அதேநேரத்தில், விஜய் நடித்த  ‘தெறி’ படத்தையும் அவர் தயாரித்திருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments