Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடடே... அசின் மகளா இது? இப்படி வளர்ந்திட்டாங்களே - கியூட் போட்டோஸ் வைரல்!

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (18:55 IST)
கேரளாவில் பிறந்து வளர்ந்த நடிகை அசின் 2001 ஆம் ஆண்டில் வெளியான சத்யன் அந்திக்காடின் நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அவரது முதல் வர்த்தகரீதியான வெற்றித் திரைப்படம் 2003-ஆம் ஆண்டில் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமான அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி ஆகும். 
 
அந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றார். அவரது முதல் தமிழ் திரைப்படமான எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி. இந்த படமும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது. அதன் பின்னர் கஜினி திரைப்படத்தில் நடித்தார். அப்படத்திற்கு பிலிம்பேர் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.
 
"கஜினி" படத்தை தொடர்ந்து "வரலாறு", "போக்கிரி" , "வேல்" , "தசாவதாரம்" ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார். தமிழ் கஜினி திரைப்படத்தின் இந்தி தழுவலான "கஜினி"யின் மூலம் அசின் இந்தி திரையுலகில் கால் பதித்தார், இதன்மூலம் பிலிம்பேர் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதைப் பெற்றார். அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்த அவர் 2016 ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மா என்பவரைக் காதல் திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ARIN என்ற 5 வயது மகள் இருக்கிறாள். இந்நிலையில் மகளின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அல்லு அர்ஜுன் எதிராக அவதூறு கருத்துக்கள்: சட்டப்படி நடவடிக்கை என எச்சரிக்கை..!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் போட்டோஷூட் ஆல்பம்!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துங்கள்… ஜெயம் ரவி & ஆர்த்திக்கு நீதிமன்றம் உத்தரவு!

பாலாவுக்காக 10 கோடி ரூபாயை விட்டுக்கொடுத்த சூர்யா.. பிரபலம் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments