Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேற மாரி…. விஜய்யின் மாஸ்டர் பாடலை பாராட்டிய கிரிக்கெட் பிரபலம்!

வேற மாரி…. விஜய்யின் மாஸ்டர் பாடலை பாராட்டிய கிரிக்கெட் பிரபலம்!
, சனி, 30 ஜனவரி 2021 (09:51 IST)
தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஸ்வின் வாத்தி கம்மிங் பாடலை பகிர்ந்து பாராட்டியுள்ளார்.

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் கடந்த 13ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று 200 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது . ஆனால் அதே நேரத்தில் இந்த படம் வெளியான 16 நாட்களில் ஓடிடியில் வெளியாகியுள்ளது நேற்று நள்ளிரவு முதல் இந்த படம் அமேசான் பிரைமில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ரசிகர்களைக் கவர்ந்திழுத்த நிலையில் இப்போது இணையத்தில் அந்த பாடல்களின் வீடியோ வடிவங்களும் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற விஜய்யின் அறிமுகப் பாடலான வாத்தி கம்மிங் பாடலை தன்னுடைய சமூகவலைதளத்தில் பகிர்ந்த அஸ்வின் அதில் ‘வேற மாரி..’என பாராட்டியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான அஸ்வின் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்தை கேவலப்படுத்தி மாஸ்டரில் காட்சி! – கொந்தளித்த அஜித் ரசிகர்களால் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்