டிராகன் படத்தை மகேஷ் பாபு பார்க்க வேண்டும்.. இயக்குனர் அஸ்வத்தின் ஆசை!

vinoth
செவ்வாய், 4 மார்ச் 2025 (12:35 IST)
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள டிராகன் படம் கடந்த மாதம் 21 ஆம் தேதி ரிலீஸாகி பெருவாரியான வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கடாயு லோஹர் மற்றும் மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

லவ் டுடே வெற்றியை அதிர்ஷ்டத்தின் மூலம் கிடைத்த வெற்றி அல்ல என்று ப்ரதீப் ரங்கநாதன் ‘டிராகன்’ படம் மூலமாக மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியுள்ளார். படம் தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதும் வசூல் வேட்டையை நிகழ்த்தி வருகிறது. இதுவரை இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசும்போது “என்னுடைய முதல் படம் ரிலீஸான போது, அதைப் பற்றி மகேஷ் பாபு சார் பாராட்டிப் பதிவிட்டதால் தெலுங்கு ரசிகர்கள் அந்த படத்தைக் கொண்டாடினர். அதே போல அவர் டிராகன் படத்தையும் பார்க்கவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments