Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அசோக் செல்வன் நடிப்பில் ரீமேக் ஆகிறதா கமல்ஹாசனின் சத்யா…. இயக்குனர் இவரா?

அசோக் செல்வன் நடிப்பில் ரீமேக் ஆகிறதா கமல்ஹாசனின் சத்யா…. இயக்குனர் இவரா?

vinoth

, வியாழன், 28 மார்ச் 2024 (14:17 IST)
நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கிய திரைப்படம் போர்த் தொழில். கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களைக் குவித்து நல்ல வசூலை ஈட்டியுள்ளது. 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து கடந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் மற்றும் அசோக் செல்வன் ஆகிய இருவரும் மீண்டும் ஒரு படத்துக்காக இணைகின்றனர். இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படம் கமலஹசன் நடிப்பில் 1988 ஆம் ஆண்டு வெளியான சத்யா படத்தின் ரீமேக் என்று சொல்லப்படுகிறது. சத்யா திரைப்படம் 1985 ஆம் ஆண்டு வெளியான அர்ஜுன் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கத்துகிட்ட மொத்த வித்தையும் திரும்ப வருகிறது…. அஞ்சான் படமும் ரி ரிலீஸுக்கு ரெடி!