Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாடல் உலகிலிருந்து திரையுலகிற்கு வரும் ஆஷிமா நர்வால்

Advertiesment
மாடல் உலகிலிருந்து திரையுலகிற்கு வரும் ஆஷிமா நர்வால்
, திங்கள், 7 மே 2018 (15:03 IST)
ஆஷிமா நர்வால் சிட்னியை சேர்ந்த மாடல் ஆவார். 2015 ஆம் ஆண்டு புதுவருடத்தின் போது மாடலிங் துறையில் நுழைய வேண்டும் என்பதை ஆஷிமா நர்வால் ஒரு தீர்மானமாகவே வைத்திருந்தார். 

அந்த ஆண்டிற்குள்ளேயே இவர் மிஸ் சிட்னி ஆஸ்திரேலியா எலிஜென்ஸ் மற்றும் மிஸ் இந்தியா குளோபல் 2015 ஆகிய இரு பட்டங்களை வென்றுள்ளார்.
 
ஆசிமாவிற்கு கலை மீது எப்போதும் ஒரு கண் உண்டு. ஆசிமா தனது 9 வயதில் சிறந்த கலைப் படைப்பிற்கான முதல் விருதை பெற்றார். தொடர்ந்து பல பட்டங்களையும் பரிசுகளையும் குவித்துள்ளார். சிட்னியில் உள்ள ஆசிமாவின் இருப்பிடத்திற்கு சென்றால், ஓவியங்கள் நிறைந்த அவரது அறையைக் காண முடியும். ஆஷிமா நர்வால் மிகக் குறுகிய காலக் கட்டத்திலேயே ஆஸ்திரேலியாவின் பிரபலங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். தற்பொழுது மாடலாக இருக்கும் இவர் படவாய்ப்புகள் மூலம் நடிப்பு உலகில் அறிமுகமாக உள்ளார்.
webdunia
நடிப்புப் பயிற்சி
அஷீமா ஒரு நாடக நடிகராவார் மேலும் நடனம் என்பது, ஆசிமாவின் பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஒன்றாகும். புதிய வடிவான நடனங்களைக் கற்பதில் இவருக்கு அதிக ஆர்வம் உண்டு.
webdunia
சிறப்பு திறன்கள்
புதிய மொழிகளை கற்றுக் கொள்வதில் ஆசிமாவிற்கு அதிக ஆர்வம் உண்டு. இந்தியாவில் பயணம் செய்ததிலிருந்து, இவர் தெலுங்கு மற்றும் தமிழ் மொழியைக் கற்றிருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இருட்டு அறைக்கு முரட்டு குத்துவிட்ட பாரதிராஜா