Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆர்யன் கான் கைது...ஷாருக்கானை சந்தித்த சூப்பர் ஸ்டார்!

Advertiesment
ஆர்யன் கான்  கைது...ஷாருக்கானை சந்தித்த சூப்பர் ஸ்டார்!
, திங்கள், 4 அக்டோபர் 2021 (15:52 IST)
சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மகன் போதைப்பொருள் விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில்  மற்றொரு பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான், ஷாருக்கானை சந்தித்துள்ளார்.

இந்தியாவின் முதல் உல்லாசக் கப்பல் என்ற பெருமையுடன் எம்பிரஸ் தனது பயணத்தை தொடங்கியது. இந்த கப்பலில் போதை பார்ட்டி நடைபெற இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனை இறங்கினர்.

சுமார் 7 மணி நேரம் நீடித்த இந்த சோதனையின் முடிவில் டை செய்யப்பட்ட கொகைன், ஹஷிஷ், எம்.டி.எம்.ஏ போன்ற போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் 13 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 13 பேரில் பிரபல பாலிவுட் நடிகர் மகனும் ஒருவர் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த பாலிவுட் நடிகர் ஷாருக்கான் எனவும் அவரது மகன் ஆர்யன் கான் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் பாலிவுட்டில் எதிரும் புதிருமாக உள்ள ஷாருக்கான் சல்மான் கான் பொதுவெளியில் அதிகம் பேசுவதில்லை. ஆனால் ஆர்யன்கான் விவகாரம் குறித்துப் பேச ஷாருக்கான் இல்லத்திற்குச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. மேலும், ஸ்பெயினில் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சல்மான்கான் இந்தியா திரும்பி ஷாருக்கானை சந்தித்துள்ளதாகத் தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மலையாள சினிமாவில் கால்பதிக்கும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்.. முதல் படமே சூப்பர் ஸ்டார் படம்!