ஓ. பன்னீர் செல்வம் பழைய பன்னீர் செல்வமாக நேற்றிரவு மெரினாவில் புதிய அவதாரம் எடுத்தார். ஆளாளுக்கு அவரை வீரா சூரா என்று பாராட்டுகின்றனர். எதுக்கும் போட்டு வைப்போம் என்று, பன்னீர் செல்வம் சார் சூப்பரா பேசினீங்க என்று ஆர்யாவும் ஒரு ட்வீட் போட்டார்.
அந்தோ பரிதாபம். சபாஷ் ஆர்யா என்று பாராட்டுறதுக்கு பதிலாக பல்பு கொடுக்கும் ஒரு ட்வீட்தான் பதிலாக கிடைத்தது.
கடம்பன் படத்தில் ஆர்யா நடித்திருக்கிறார் அல்லவா. அதன் ட்ரெய்லர் வெளியீடு ஆர்யா டப்பிங் பேசாததால் தள்ளிப் போகிறது. இதனால் கடுப்பான எடிட்டர் ஆண்டனி ரூபன், அவரு பேசுறது இருக்கட்டும், முதல்ல நீங்க டப்பிங் பேசுங்க என்று பதில் ட்வீட் போட்டு கலாய்த்திருக்கிறnர்.
இந்த எடிட்டருங்களே இப்படித்தான்... உண்மையை டக்குன்னு போட்டு உடைச்சிடுவாய்ங்க.