Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்யா நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கும் பேண்டஸி படம்!

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (16:45 IST)
ஆர்யா நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கும் படம் ஒரு பேண்டசி படமாக உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

சூதுகவ்வும் எனும் ட்ரண்ட் செட்டிங் படத்தை இயக்கியவர் நலன் குமாரசாமி. இந்த படத்தைப் பார்த்த கமல் நலனை அழைத்து பாராட்டியதோடு தன் படத்தை இயக்கும் வாய்ப்பையும் அளித்தார். ஆனால் சில காரணங்களால் அந்த படம் நடக்காமல் போனது. அதன் பின்னர் நலன் விஜய் சேதுபதியை வைத்து காதலும் கடந்து போகும் திரைப்படத்தை இயக்கினார். அந்த படம் திரையரங்குகளில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் இப்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

இந்த படம் வெளியாகி 5 ஆண்டுகளாக இயக்குனர் நலன் இதுவரை எந்த படத்தையும் இயக்கவில்லை. இந்நிலையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்க ஒப்புக்கொண்டார்.  ஆர்யா நடிக்கும் இந்த படம் ஒரு பேண்டஸி த்ரில்லராக உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments