ரசிகர்களின் தொண்டையைக் கவ்விய காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்.. வசூல் நிலவரம் என்ன?

Webdunia
திங்கள், 5 ஜூன் 2023 (15:12 IST)
கடந்த வாரம் தமிழ் சினிமாவில் நான்கு படங்கள் ரிலீஸ் ஆகின. ஆனால் எந்த படமும் ரசிகர்களை பெரிதாக கவர்ந்து திரையரங்குகள் நோக்கி மக்களை வரவழைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அதில் மாஸ் ஹீரோ, மாஸ் இயக்குனர் என பெரியபட்ஜெட்டில் ரிலீஸான படம்தான் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்.

விருமன் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் முத்தையா ஆர்யாவை கதாநாயகனாக்கி இந்த படத்தை இயக்க, ஜி ஸ்டுடியோஸ் பைனான்ஸில் ட்ரம்ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்தது.  இந்த படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆனது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரிலீஸாகி மூன்று நாட்களில் உலகம் முழுவதும் வெறும் 4 கோடி ரூபாய் அளவுக்குதான் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த இரண்டு மாதங்களாக ரிலீஸ் ஆன எந்த படமும் பெரியளவில் வசூல் செய்யவில்லை என்பது சோகமான ஒன்றாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கிளாமர் லுக் க்ளிக்ஸ்!

ரஜினி படத்தில் இருந்து விலகுகிறேன்… சுந்தர் சி திடீர் அறிவிப்பு!

பணமோசடி வழக்கு… இளம்பெண்ணின் தந்தை கொடுத்த புகாரில் ‘பிக்பாஸ்’ புகழ் தினேஷ் கைது?!

மீண்டும் இணையும் ராஜமௌலி & ஜூனியர் என் டி ஆர்… பயோபிக் படமா?

விஜய் சேதுபதி நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கும் படத்தில் இவர்தான் ஹீரோயின்!

அடுத்த கட்டுரையில்
Show comments