Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பூஜையுடன் தொடங்கியது ஆர்யாவின் அடுத்த படம்:

பூஜையுடன் தொடங்கியது ஆர்யாவின் அடுத்த படம்:
, திங்கள், 25 அக்டோபர் 2021 (17:51 IST)
ஆர்யா நடித்த சார்பாட்டா பரம்பரை மற்றும் அரண்மனை 3 ஆகிய இரண்டு திரைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படமான ’எனிமி’ என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ஆர்யாவின் 33வது படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது இந்த படத்தை பிரபல இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஆர்யா நடிப்பில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கிய ’டெடி’ என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் அதனை அடுத்து தற்போது மீண்டும் அதே கூட்டணி இணைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த படம் வெற்றி பெற திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியன் 2 இனி நடக்க வாய்ப்பே இல்லையா? அதிர்ச்சியளிக்கும் தகவல்!