Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்யாவோடு மீண்டும் இணையும் சந்தானம்… விரைவில் உருவாக உள்ள ஹிட் கூட்டணி!

Webdunia
வியாழன், 28 ஜூலை 2022 (16:20 IST)
பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் வெற்றி தமிழ் சினிமா ரசிகர்கள் நன்கு அறிந்ததே.

ஆர்யா நடிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் உருவான பாஸ் என்ற பாஸ்கரன் திரைப்படம் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதற்கு முக்கியக் காரணமாக சந்தானம்- ஆர்யா கூட்டணியின் நகைச்சுவையும் அமைந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியை அடுத்து இரண்டாம் பாகம் உருவாக்க தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆர்யா நடிப்பில் ராஜேஷ் எம் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் சந்தானத்தை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஹீரோவான பின்னர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை என்ற உறுதியோடு இருக்கிறார் சந்தானம். அதனால் இரண்டாம் பாகத்தை டபுள் ஹீரோ கதையாக மாற்றி சந்தானத்துக்கும் நிகரான முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட உள்ளதாம். இதனால் சந்தானம் நடிக்க சம்மதித்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காயடு லோஹரிடம் ED விசாரணையா? வளர்ந்து வரும் நேரத்தில் இப்படி ஒரு சிக்கலா?

ஹீரோவாக மாறும் சிவகார்த்திகேயன் பட தயாரிப்பாளர்.. மாஸ் வீடியோ வெளியீடு..!

சிவகார்த்திகேயன் என்னை காமெடி வேடத்தில் நடிக்கக் கூப்பிட மாட்டார்- சூரி ஓபன் டாக்!

இலங்கையில் நடக்கும் சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ பட ஷூட்டிங்!

திருக்குறளுக்கு உரை எழுதியுள்ள வைரமுத்து… தலைப்பை வெளியிட்டு நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments