Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகர் ஆர்யாவுக்கும், சாயிஷாவுக்கும் காதல்?

நடிகர் ஆர்யாவுக்கும், சாயிஷாவுக்கும் காதல்?
, வெள்ளி, 4 ஜனவரி 2019 (11:02 IST)
நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் இடையே காதல் மலர்ந்திருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.



 
தமிழ் சினிமாவில்  பிளேபாயாக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. இவர் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிகளில் சில பெண்களை தேர்ந்தெடுத்தார். ஆனால், இறுதி நிகழ்ச்சியில் யாரையும் திருமணம் செய்து கொள்ளும் எண்ணமில்லை என கூறி எஸ்கேப் ஆனார்.
 
இந்நிலையில், நடிகை சாயிஷாவுடன் அவருக்கு காதல் மலர்ந்திருப்பதாக செய்திகள் உலா வருகிறது. கஜினிகாந்த் படத்தில் முதன் முதலாக இருவரும் இணைந்து நடித்தனர். தற்போது, கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் காப்பான் படத்தில் சாயிஷா நாயகியாகவும், ஆர்யா முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்கள்.
 
இந்த கஜினிகாந்தில் தொடங்கிய நட்பு ‘காப்பான்’ படப்பிடிப்பில் காதலாக மாறியிருப்பதாக கூறப்படுகிறது. இருவரும் ஒரே மதம் என்பதால் திருமணத்திற்கு பிரச்சனை இருக்காது. விரைவில் திருமண அறிவிப்பு வெளியாகலாம் என சிலர் கூறுகின்றனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரான்சில் இதுவரை இப்படி யாரும் செஞ்சதில்லை: தல ரசிகர்கள் செய்த சூப்பர் விஷயம்!